தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்
பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர்கள் வந்த கப்பல் தூத்துக்குடி அருகே சிக்கியது அந்த கப்பலில் இருந்து 100 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் வைபவ் கப்பலில் கடற்படையினர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு கப்பல் வந்து கொண்டிருந்ததை கண்டு அதை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அந்த கப்பல் சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றது தெரியவந்ததையடுத்து. சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் 6 பேர் இருந்துள்ளனர். அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இலங்கை பதிவெண் கொண்ட அந்த கப்பலில் கடலோர காவல்படையினர் சோதனையிட்டனர். இந்த சோதனையில் அந்த கப்பலில் இருந்தவர்களிட ம் 100 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள், சிந்தடிக் மெத்தலின் எனும் அதி பயங்கர போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட அந்த கப்பல், அந்த கப்பல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இலங்கை வழியாக தூத்துக்குடி கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது பிடி பட்டுள்ளது. கப்பலில் இருந்த 6 பேரும் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட நபர்கள் மற்றும் கப்பல், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் ஆகியவை நாளை மதியத்திற்குள் தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வரப்படுகிறது.