ராகுல் காந்தியை கேலி செய்யும் பப்பு வார்த்தைக்குத் தடை

 

பிரசார விளம்பரத்தில் ராகுல் காந்தியை கேலி செய்யும் வார்த்தைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ராகுல் காந்தியை சின்னப் பையன் என கேலியாக வர்ணிக்கும் விதமாக ‘பப்பு' என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்தி குஜராத் தேர்தல் பிரசாரத்திற்காகத் தயாரித்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்ய பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் அளித்த புகாரின் பெயரில் தேர்தல் ஆணையம் இந்த வார்த்தைக்குத் தடைவிதித்துள்ளது.

 

 

More News >>