எந்திரனைத் தொடர்ந்து 2.0 படத்திலும் ஐஸ்வர்யா ராய்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள '2.0' படத்தில் ஐஸ்வர்யா ராயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
2.0 படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளார் என்றத் தகவலை ஐஸ்வர்யாவுக்கு டப்பிங் கொடுத்த சவிதா ரெட்டி உறுதி செய்துள்ளார். முதலில் 2.0 ஒஅடத்தில் ரஜினிக்கு எமி ஜாக்சன் மட்டுமே ஜோடி எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஐஸ்வர்யா ராயும் படத்தில் உள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com