`சிஎஸ்கே-வில் தோனி எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார்?- பிளமிங் வைத்த சஸ்பன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார் என்பது குறித்து சஸ்பன்ஸ் கலந்த பதிலை அளித்துள்ளார் அணயின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்.

இன்னும் ஒரு சில நாட்களில் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா தொடங்கப் போகிறது. முதல் போட்டியே சிஎஸ்கே-வுக்கும் அதன் பரம வைரி மும்பை இந்தியன்ஸுக்கும் தான் என்பது எதிர்பார்ப்பை இன்னும் எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் களத்துக்கு வரும் முன்னாள் சாம்பியன் சிஎஸ்கே கண்டிப்பாக தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டத் துடித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தனது ஃபார்மை தக்கவைக்கப் பார்க்கிறது.

இந்த சூழலில் சிஎஸ்கே கேப்டன் தோனி, எந்த இடத்தில் களம் இறங்குவார் என்பது குறித்து பேசியுள்ளார் அணியின் பயிற்சியாளர் பிளமிங். இது குறித்து பிளமிங் கூறுகையில், `தோனி, இந்த முறை கண்டிப்பாக டாப் ஆர்டரில் ஆடுவார். அது எந்த இடம் என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஆட்டத்துக்கு தகுந்தாற் போல மாறும். ஆனால், இந்த முறை தோனியின் பேட்டிங் ஆதிக்கம் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>