உணவின்றி தவித்த 50 நாய்கள்.. தேடி தேடி உணவளித்த சென்னை பெண் கமிஷனர்!

மெரினா என்றால் சென்னைமக்களின் முக்கிய, பொழுதுபோக்காகவும் மற்றும் சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நிவர் புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. லைட் ஹவுஸ் பகுதிகளில் கடற்கரையில் மணலே இல்லாமல் அனைத்தும் ரோட்டில் அரித்துகொண்டுவரப்பட்டு விட்டது. இதனால் பல்வேறு பறவைகள் விலங்கினங்கள் உணவுகள் இன்றி தவித்து வருகின்றன.

இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அப்பகுதிக்கு வழியாக ரோந்து சென்றுள்ளாா். அப்பொழுது அங்கு உணவின்றி சுற்றி திாிந்த நாய்களை பார்த்து அவைகளுக்கு உணவளிக்க முன்வந்து அதற்கு தேடி தேடி உணவளித்தாா். உணவின்றி தவித்த 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவளித்தார். இதனை பாா்த்த சமூக ஆர்வலர் ஒருவர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளாா். இதனை பார்த்த பலரும் சுப்புலட்சுமியின் இச்செயலை பாராட்டி வருகின்றனா். தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறார் ஆணையர் சுப்புலட்சுமி.

More News >>