இனி வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பலாம்!

வங்கிகளில் கால் வலிக்க நின்று பணம் எடுத்து வருவது போன்ற தலைவலியை இன்றைய ஒருங்கிணைந்த கட்டண சேவைகள் (UPI- Unified Payment Service) வெகுவாக குறைத்துள்ளன. இது டிஜிட்டல் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் வங்கிகளில் இருந்து ஏடிஎம் வாசலுக்கு மாறினார்கள் பின்னர் வங்கிகளின் செயலிகளுக்கு மாறினார்கள். ஆனால் தற்போதைய யுபிஐ பணம் செலுத்துதல் முறை மிக எளிதானதாகவும், பயனாளர்க்கு எளிய முறையிலும் உள்ளதால் இந்த முறையை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

இந்த யுபிஐ பணம் செலுத்துதல் முறையில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே முதல் போன் பே தொடங்கி அமேசான் பே வரை வெகுஜன மக்களிடையே கோலோச்சி வருகின்றன. இந்த வரிசையில் இப்போது தனது தடத்தை பதிய வருகிறது பேஸ்புக் நிறுவனத்தில் ஒன்றான வாட்ஸ்ஆப் நிறுவனமும்.

வாட்ஸ்ஆப் நிறுவனமும் யுபிஐ பேமெண்ட் முறையில் தனது பணபரிமாற்ற சேவையை துவங்கவுள்ளது. இதற்கு பயனாளர்கள் செய்ய வேண்டியது,

படி 1: வாட்ஸ்ஆப் செயலியை திறந்து settings யை சொடுக்கவும்.

படி 2: Payment பட்டனை சொடுக்கி>Add payment method> select the bank

படி 3: வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து ஒரு கடவுச்சொல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும். இது வங்கியின் சேமிப்பு கணக்கு மற்றும் தொலைபேசி எண்களை சோதித்து பார்க்க

படி 4: பின்னர் வாடஸ்ஆப் செயலிக்கான யுபிஐ பின் எண்ணை அமைத்து கொள்ளலாம்.

இந்த முறைகள் முடிந்த பின்னர் நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களின் எண்ணை வாட்ஸ்ஆப்பில் தேடி, தேர்வு செய்து அனுப்பலாம்.

அவர்களின் எண் வாட்ஸ்ஆப்பில் இல்லையென்றால், அந்த நபரின் யுபிஐ பின் எல்லது QR code போன்றவற்றை உள்ளீடு செய்து பணம் அனுப்பலாம்.

இதற்கான ஒப்புதலை இந்திய தேசிய பரிமாற்ற கழகம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா தொற்றில் ஏடிஎம் மூலம் எடுக்கப்படும் பணத்தின் அளவு சராசரியாக ரூ. 5000 உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News >>