ஓடிடி சந்தா சலுகையுடன் விவோ ஒய்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பாக விவோ ஒய்1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மென்பொருளும், மீடியாடெக் ஹீலியோ பி35 SoC பிராசஸரும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள தயாரிப்பு வரிசையில் வெளிவந்துள்ளது. செல்ஃபி காமிரா வாட்டர்டிராப்-ஸ்டைல் நாட்ச்சில் உள்ளது.

விவோ ஒய்1 சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.22 அங்குலம் எச்டி+ (720X1520 பிக்ஸல் தரம்) எல்சிடி; 88.6 விகிதாச்சாரம்இயக்கவேகம்: 2ஜிபிசேமிப்பளவு: 32 ஜிபி (256 ஜிபி வரைக்கும் அதிகரிக்கும் வசதி)முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 13 எம்பி ஆற்றல்பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ எம்டி6765 SoCஇயங்குதளம்: ஃபன்டச் ஓஎஸ் 10.5; ஆண்ட்ராய்டு 10மின்கலம்: 4030 mAh

ரியர் ஃபிளாஷ் உள்ளிட்ட வசதிகள் கொண்ட விவோ ஒய்1, ஷிமரோ ஓடிடிக்கு 90 நாள் சந்தா மற்றும் ஒன்அசிஸ்ட் மூலம் ஒருமுறை திரையை மாற்றக்கூடிய சலுகைகளுடன் கிடைக்கும். இதன் உத்தேச விலை ரூ.7,990/- ஆகும்.

More News >>