எனது பட்டியலில் விராட் கோலியும், தோனியும் உண்டு - மனம் திறக்கும் குல்தீப் யாதவ்
எனது தனிப்பட்ட இலக்கு பட்டியலில் விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் உள்ளனர் என்று இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள குல்தீப் யாதவ், ‘‘இந்த ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட இலக்கும் எனக்கென்று எதுவுமில்லை என்று கூறினால், அது பொய்யாகத்தான் இருக்கும். என்னிடத்தில் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதில் விராட் கோலியும், தோனியும் அடங்குவார்கள்.
சுழற்பந்து வீச்சில் அவர்களை எதிர்கொள்வதற்கு கடினம். ஐபிஎல் தொடரில் மட்டும் அவர்களை வீழ்த்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். சில நேரங்களில் எனக்கு அந்த தகுதி உள்ளதாக உணர்வேன். ஆனால், ஒரே அணியில் இருப்பதால் சர்வதேச போட்டிகளில் அதற்கான வாய்ப்புள்கள் இருக்காது. ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் அவர்களை வீழ்த்த நான் விரும்புகிறேன். இந்த தொடர் அதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
ஐபிஎல் தொடர் மிகவும் பெரியது. இதில் கலந்து கொள்வதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். பொதுவாக இது பேட்ஸ்மேனுக்குரியது. பந்து வீச்சாளர்கள் ஜொலிப்பது கடினம் என்பார்கள். ஆனால், ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் சிறந்த பிளாட்பார்ஃம் என்பதுதான் என்னுடைய கருத்து.
ஒவ்வொரு முறை களத்தில் இருக்கும்போதும் அழுத்தம் இருக்கதான் செய்யும். ஆனால், அதையெல்லாம் எவ்வாறு கையாண்டு, உங்களுடைய இலக்கை அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com