மேற் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர மற்றும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இதுவரை அளிக்கப்பட்டு வந்தது வந்தது. 2000-ஆவது ஆண் டில் இந்திய மருத்துவக் குழுவின் பட்ட மேற்படிப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்து மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் , மருத்துவ உயர் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும் இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசு சார்பிலும் சில மருத்துவ சங்கங்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படிமருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்த்தின் இந்த தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை.