40 மில்லியன் எட்டிய தளபதி பட டீஸர்..

சினிமா தியேட்டர்களில் வசூல் நிலவரத்தை கருத்தில் கொண்டு பெரிய படங்கள் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் வெளியாகமாலிருக்கிறது. கோடிகளில் கொட்டி படத்தை தயாரித்திருக்கும் நிலையில் தற்போது தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு கொரோனா வைரஸ் தொற்ற கருத்தில் கொண்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் வசூல் பெரிதாக இருக்காது என்பதால் பெரிய படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 100 சதவீத டிக்கெட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதேசமயம் மாஸ்டர், ஜெகமே தந்திரம் போன்ற படங்களின் டீஸர் பாடல்கள் யூடியூபில் மில்லியன்களில் வியூஸ் பறந்துக்கொண்டிருக்கிறது. விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். கோலிவுட்டில் மிகப்பெரிய மற்றும் எதிர் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். 'கைதி' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆண்ட்ரியா எரேமியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் மற்றும் சாந்தனு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் தீபாவளி நாளில் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பையும் பாராட்டையும் வெளியிட்டது. இது மிகவும் விரும்பப்பட்ட டீஸராக மாறுவது குறித்த பதிவுகளை உருவாக்கி வருகிறது. இப்போது டீஸர் 40 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் இந்த சாதனையை அறிவித்தது."நம்ம படை படை, வெலுக்கம் தர தர 40 மில்லியன் பார்வைகளுடன் யூடியூப்பை ரெய்டு செய்கிறார் வாத்தி வா நண்பா!" என ட்வீட்டரில் மெசேஜ் வெளியிடுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளப்பட்டது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இப்படம் ரிலீஸ் குறித்து இன்னும் அதிகார பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

More News >>