டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர் கள் முழுவிபரங்களை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரியான விவரங்களை அளிக்காவிட்டால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பைப் கொடுத்திருந்தது. அதில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற நான் பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை.
விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அதை பெறுவதற்கு தகுதி இருந்தும் எனக்கு அந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதே சமயம் அந்த வகையான ஒதுக்கீடு, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்படி தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமற்றது. ஆகவே தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அதற்கான வழக்கறிஞர் பிற மாநில பல்கலைக்கழகங்களில் படித்து தமிழ்வழி சான்று பெற்றவர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தால் முறையாக தமிழ் வழியில் பயின்றவர்களின் நிலை தான் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள். அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தால் முறையாக தமிழ் வழியில் பயின்றவர்களின் நிலை தான் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கடந்த 5 ஆண்டுகளில் வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தொலை தூர கல்வியில் படித்து தமிழ்வழி சான்றிதழ் காண்பித்து வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? பட்டப்படிப்பு முடித்து டிஎன்பிஎஸ்சியில் தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கான20 சத இட ஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?
இதில் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்று இந்த இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? தொலைதூர கல்லூரிகளில் கல்வி கற்று சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த முழு விவரங்களையும் தேர்வு ஆணையம் முழு விவரங்களையும் வருகின்ற செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும். சரியாக பதிலளிக்கவில்லை என்றால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என உத்தரவிட்டனர் . தொடர்ந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.