அசைவ ஸ்டைலில் கத்தரிக்காய் வெந்தய கறி செய்வது எப்படி??

அசைவம் விரும்பிகள் பறப்பது, ஓடுவது என்று பல வகை உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் சைவ விரும்பிகள் கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் தான் அவர்களுக்கு அசைவ உணவு. அப்படிப்பட்ட கத்தரிக்காவை அசைவ பாணியில் எப்படி வெந்தய கறி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-கத்தரிக்காய் - 1/4 கிலோகடலை பருப்பு - 2 ஸ்பூன்உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 6வெந்தயம் - 1 ஸ்பூன்இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 கப் மஞ்சள் - 1 ஸ்பூன்புளி - சிறிதளவுதனியா - 1 ஸ்பூன்சீரகம் - 1/2 ஸ்பூன்.

செய்முறை:-முதலில் கத்தரிக்காவை நான்கு பாகங்களாக வெட்டி கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

வேறொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, சீரகம், வெந்தயம், பெருங்காயம், புளி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

வறுத்த கலவையை மிக்சியில் பொடித்து கொள்ளவும். அரைத்த பொடியை கத்தரிக்காயில் சேர்த்து நன்றாக பிரட்டி தேவையான அளவு நீர் சேர்த்து ஒரு 20 நிமிடம் கொதிக்க வதக்கவும். கத்தரிக்காய் வெந்தய கறியை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன்..

More News >>