தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

 

நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் ஒரு படகில் பருத்திதுறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்ததோடு படகை பறிமுதல் செய்தது.

தமிழக மீனவர்கள் பத்துபேரும் காங்கேசம் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

More News >>