விளக்குகள் விற்பனையில் வேகமில்லை : விரக்தியில் விளாச்சேரி வியாபாரிகள்

கார்த்திகை திருநாள் திருநாளையொட்டி தயாரிக்கப்பட்ட விளக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகாததால் விளாச்சேரி வட்டார வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது விளாச்சேரி கிராமம் . இங்கு தயாராகும் அகல் விளக்குகள் பிரசித்தி பெற்றவை.குறிப்பாக கார்த்திகை மாத தீப திருநாளையொட்டி வீடுகளில் ஏற்றப்படும் அகல் விளக்குகள் இந்த ஊரின் சிறப்பம்சம் இந்தத் தொழிலில் இவ்வூரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கார்த்திகை தீபம், விநாயகர் சிலைகள், கிறிஸ்மஸ் பொம்மைகளும் இங்குத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.தற்பொழுது கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் மற்றும் பெரிய விளக்குகள் போன்றவற்றைத் தயாரித்து வருகின்றனர்.ஒரு ரூபாய் விலையுள்ள அகல்விளக்கு முதல் 300 ரூபாய் வரை உள்ள பெரிய அலங்கார விளக்குகள் வரை இவர்கள் தயாரித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து இதுவரை விற்பனையாகாமல் விளக்குகள் தேங்கி உள்ளதால் சிறு, மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த வருட கார்த்திகை தீபத்திருநாளையொட்டி புதிதாகத் தயாரிக்கப்பட்ட லட்சுமி அகல் விளக்குகள், விநாயகர் அகல் விளக்குகள், 5 தீப விளக்குகள் ஆகியவை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.ஆனாலும் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்று இவர்கள் நடைபெறவில்லை என்பதால் இவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

More News >>