காலண்டராவது ஒண்ணாவது... கிரண்பேடி கிடுக்கிப்பிடி..
புதுச்சேரியில் அரசு சார்பில் வெளியிட வேண்டிய அடுத்த ஆண்டுக்கான டைரிகள், காலண்டர்களை அச்சிடுவதற்காக ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதல் வேண்டி கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.கோப்புகளைப் பரிசீலித்த கவர்னர் கிரன்பேடி அரசு சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
தேவையற்ற மற்றும் அனாவசிய செலவுகளைக் குறைக்குமாறும் மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. எனவே அதன் காரணமாக காலண்டர் மற்றும் டைரிகள் தொடர்பான கோப்புகளுக்கு, கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. அதுமட்டுமல்ல. இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மத்திய உள்துறையின் பரிசீலனைக்குக் கோப்பை அனுப்பிவிட்டார். இதனால் புதுச்சேரி அரசு சார்பில் வரும் 2021ம் ஆண்டுக்கான டைரி, காலண்டர்கள் அச்சிடும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.