ஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வருகிறது புதிய விதி!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது.

இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதன்படி அபராதத் தொகையைக் கடுமையாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து சில குற்றங்களுக்கு மட்டும் அந்தந்த மாநில அரசுகளே அபராத தொகையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட சில மாநிலங்களில் சில குற்றங்களுக்கு அபராதத் தொகை குறைக்கப்பட்டன.

இந்நிலையில், ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பதாகைகளை பங்க்குகளில் வைக்க அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹெல்மட் இல்லை, சீட் பெல்ட் இல்லையென்றாலும் பெட்ரோல் இல்லை என பதாகைகளை வைக்கவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More News >>