வெளியேறுகிறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்.. மீண்டும் முரண்டு பிடிக்கும் டிரம்ப்!

அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வந்த அதிபர் டொனால்டு டிரம்ப், 20 நாட்களுக்குப் பிறகு அடங்கி விட்டார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஒப்படைக்க அவர் ஏற்றுக் கொண்டார். டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஜோ பிடன் அணியினரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பொது நிர்வாக அதிகாரி எமிலி மர்பியின் பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து, துன்புறுத்தினார்கள். அது தொடரக் கூடாது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்திற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

நாட்டின் நலனுக்காக நிர்வாகத்தை மாற்றிக் கொடுப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்யுமாறு எமிலி மர்பி டீமுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய டுவிஸ்டாக, ``நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார் ஆனால் பைடனை எலெக்ட்டோரல் காலேஜ் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக அறிவித்தால் வெளியேறிவிடுகிறேன்" எனக் கூறியுள்ளார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி முறைகேட்டில் ஈடுபட்டே வெற்றி பெற்றது என்றும் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.

More News >>