பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
ஈராக்கில், ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஈராக்கில், கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அரசு படைக்கு இடையே போர் வெடித்தது. அப்போது, மோசூல் நகரைவிட்டு வெளியேற முயன்ற 40 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தினர். இதையடுத்து, கடத்தப்பட்டவர்களில் ஒருவர் தப்பிவிட்டதாகவும், மீதமுள்ள 39 பேரையும் தீவிராதிகள் கொல்லப்பட்டதாகவும் கடந்த மாதம் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து, கொல்லப்பட்ட இந்தியர்களின் 39 பேரில் 38 பேரின் சடலங்கள் நேற்று தனி விமானம் மூலம் இந்தியா எடுத்து வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், ஈராக்கில் கொல்லப்பட்ட பஞ்சாபை சேர்ந்த 27 மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதைதவிர, பஞ்சாபை சேர்ந்த 27 பேர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என நவ்ஜோத் சிங் சித்து கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com