தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம்.. கார்த்திகை தீப திருவிழாவின் அறிவியல் பின்னணி
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். தமிழ் மாதங்களின் கணக்கின்படி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் இந்த தீவிர திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கார்மேகம் மழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் கனமழை தை மழை நெய் மழை என்பது பழமொழி. கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் செங்காந்தள் பூ மிகுதியாக மலரும் காலமும் கார்த்திகை மாதம்தான். கார்த்திகை எனப்படும் நட்சத்திர கூட்டம் கீழ்வானில் மாலை நேரங்களில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழகத்தில் பாரம்பரியமான பழமையான விழாக்களில் இதுவும் ஒன்று.
இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லப்படுகின்ற கருத்துக்கள் பலரும் அறிந்தவைதான். ஆனால், இந்த பண்டிகையின் பின்னணியில் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது பலரும் அறியாத ஒன்று. தற்போது உலகெங்கும் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்துதான் இந்த கார்த்திகை தீபத் திருவிழா. தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர் கிருமிகள் பெரிதும் கார்த்திகை மாயைதான் பரவி மக்களுக்கு நோயை உண்டு பண்ணும். இதிலிருந்து மக்களை காத்து கொள்வதற்குத்தான் இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது.
கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற கிருமிகளை அடியோடு அழிக்கிறது. இதுமட்டுமல்லாது திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனை ஏற்றப்படும் இதிலும் ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது. ஒரே நேரத்தில் நாடெங்கும் இவ்வாறு சொக்கப்பனை ஏற்றுவதன் மூலம் அப்ப காற்றானது விண்ணில் பரவி பலத்த மழையை கட்டுப்படுத்தும் இதன்மூலம் பலத்த மழை குறைந்த மிதமான மழை பெய்யக்கூடும். வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படாமல் இருக்கவே இந்த பாதுகாப்பு ஏற்பாடு. இந்த உண்மை அறியாமல், பழைய வழக்கம் நமக்கு எதற்கு? சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம் என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்குகளை ஏற்றி நம்மை காத்து கொள்வது அவசியம்.