ட்ரம்பின் கட்டுப்பாடுகள் எதிரொலி: எச்1பி விசா தாக்கல் செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் தயக்கம் ?
வெளிநாடுகளில் இருந்து வரும் பணியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் எதிரொலியால் எச்1பி விசா தாக்கல் செய்வதை இந்திய நிறுவனங்கள் குறைத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களில் பணிப்புரிய எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை, இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தன.
இந்நிலையில், “பை அமெரிக்கன்ஸ், ஹயர் அமெரிக்கன்ஸ்” என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்1பி விசாவிற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்தார். இதன் எதிரொலியாக, இந்திய நிறுவனங்களில் இருந்து எச்1பி விசா கோரி தாக்கல் செய்வதை குறைத்துக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து வெளியாகும் செய்தி இதழ் ஒன்றில், “அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள எச்1பி விசா மீதான கட்டுப்பாட்டால் பணியாளர்களுக்குமு, அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் எச்1பி விசாக்களை கோரும் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் தற்போது விண்ணப்பங்கள் அளிப்பதை திடீரென குறைத்துக் கொண்டுவிட்டதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களும் எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்க தயங்குகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com