ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுபாடு
செல்போன் செயலிகள் மூலம் வாடகை கார்களை ஒருங்கிணைக்கும் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கான நெறிமுறைகள் 2020ல் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இனி பயணத்திற்கான உச்சபட்ச கட்டணத்தின் அளவு, சராசரி கட்டணத்தின் அளவை விட ஒன்றரை மடங்குக்கு மேல் இருக்க கூடாது.
12 மணி நேரங்களுக்கு மேல் ஒரு ஓட்டுனர் ஓலா அல்லது ஊபர் செயலி மூலம் வாகனங்களை ஓட்ட இனி தடை விதிக்கப்படும். 12 மணி நேரப் பணிக்கு பின்னர் 10 மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு தான் ஒரு ஓட்டுனர் இந்த ஆப் மூலம் மீண்டும் லாகின் செய்து பணியை தொடர முடியும். வாடகை கட்டணத்தில் 80 சதவீதத்தை ஓட்டுனர்களுக்கு ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் இனி அளிக்க வேண்டும். ஒரு பயணத்தை ஓட்டுனர் தன்னிச்சையாக ரத்து செய்தால், அதற்காக அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.