மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்! சவரனுக்கு ரூ.400 குறைந்தது! தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை! 30-11-2020
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
மேலும் பொருளாதார மந்த நிலை உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதன் தொடர்ச்சியாகத் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். மேலும் இந்த மாதத்தின் கடைசி நாளான இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4574 க்கு விற்பனையானது. விடுமுறை நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.50 குறைந்து, கிராமானது ரூ 4524 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 45248 கிராம் ( 1 சவரன் ) - 36192
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 4954 க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ.50 குறைந்து, கிராமானது 4904 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 49048 கிராம் - 39232
வெள்ளியின் விலை
தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும். ஆனால் இன்று வெள்ளியின் விலையானது, நேற்றைய விலையில் ரூ.1.40 பைசா குறைந்து, கிராமானது 63.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 63300 க்கு விற்பனையாகிறது.