கள்ள காதலியாக மாறிய பிரபல ஹீரோவின் உறவினர்..
"தாதா 87" வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் 'விஜய் ஸ்ரீ ஜி'. ஜிமீடியா தயாரிப்பில் "பொல்லாத உலகில் பயங்கர கேம்" (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் பெண் வேடத்திற்கான புதிய லுக் கார்த்திகை மாத தீபம் அன்று வெளியானது. அசல் பெண் தோற்றத்தில் கள்ளக்காதலியாக மாறி அசத்தியிருந்தார் அர்ஜூமன். பாப்ஜி படத்தில் 'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் அனித்ரா நாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நாடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி,பிக்பாஸ் ஜூலி, கதிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி லீ யாண்டர் லீமார்டி இசையில் 'கள்ள காதலா' பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. பாலாஜிபாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' (பப்ஜி) படமானது 2021ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.