சம்பள பாக்கி தருவதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. பொய் புகார் கூறி சிக்கிய 2 வாலிபர்கள்..
வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணுக்கு சம்பள பாக்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சிலுமிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் வயது 27 ஆகும். இவரது வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வதற்காக 27 வயதில் உள்ள இப்பெண்ணை ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளார். ஆனால் தீபக் அந்த பெண்ணை தவறான காணோட்டத்தில் பார்ப்பதும் ஆபாசமாக பேசுவது போன்றவற்றை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் அப்பெண் ஒரு மாதம் சென்றபின் வேலையை விட்டு நின்றுள்ளார்.
அந்த பெண் ஒரு மாத காலமாக வீட்டு வேலைகளை செய்ததற்கு தீபக் சம்பளம் எதுவும் தரவில்லை என்பதால் தினமும் தீபக்கு செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு சம்பள பாக்கி பற்றி பேசியுள்ளார். ஆனால் சில நாட்களாக தீபக் போனை எடுக்கவில்லை. தீபக்கின் வீட்டிற்கு உறவுக்காரரான ஆனந்தராஜ் வருகை தந்துள்ளார். இந்நிலையில் தீபக் அந்த பெண்ணுக்கு போன் செய்து சம்பள பாக்கியை வீட்டிற்கு வந்து வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார். அதே போல் தனியாக தீபக் வீட்டிற்கு சென்றுள்ளார். உள்ளே நுழைந்ததும் தீபக் சட்டென்று கதவை மூடி பெண்ணிடம் சம்பளம் வேண்டும் என்றால் எங்களுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்று கூறி பெண்ணிடம் தகாத முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த பெண் மிகவும் கோவப்பட்டு எனக்கு சம்பளமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு தீபக் அந்த பெண்ணை தனி அறையில் தள்ளி அடைத்து வைத்து காவல் நிலையத்துக்கு போன் செய்து எங்கள் வீட்டில் ஒரு பெண் திருட வந்ததாகவும் அவரை கையும் களவுமாக பிடித்து வைத்துள்ளோம் என்று புகார் செய்துள்ளார். போலீஸ் வந்தவுடன் அந்த பெண்ணிடம் விசாரணை தொடங்கினர். அப்பொழுது இரண்டு ஆண்களால் மிகவும் பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்ட நடந்தவற்றை தெளிவாக கூறினார். தீபக் மற்றும் ஆனந்தராஜ் கொடுத்தது பொய் புகார் என்பதை புரிந்து கொண்ட போலீஸ் இருவரையும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்திற்க்காக கைது செய்தனர்.