நாளை முதல் நான்கு நாட்கள் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

புயல் உருவாவதன் காரணமாக டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது வருகிறது. இது புயலாக மாறி, வரும் 2-ம் தேதி இலங்கையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அந்தப் புயல் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாகத் தென் தமிழகத்தில் குறிப்பாகக் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் காரணமாகத் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்த நான்கு நாட்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

More News >>