ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டி இன்று கோலாகல தொடக்கம்

ஆஸ்திரேலியாவில் இன்று 21வது காமன்வெல்த் விளையாட்டு போடிகள் கோலாகலமாக தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளில் கலந்துக்கொள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 71 நாடுகளில் இருந்து சுமார் 4500 வீரர் வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். இதில், இந்தியா சார்பில் 14 விளையாட்டு போட்டிகளில் 219 வீரர் வீராங்கணைகள் பங்கேற்கின்றனர்.

இந்த காமன்வெல்த் போட்டி தொடக்கம் முதல் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகள் மட்டுமே முதல் மற்றும இரண்டாவது இடங்களை பிடித்து பதக்கங்களை வென்று வருகிறது.

இந்தியா பொருத்தவரை, 16 முறை பங்கேற்று 155 தங்கம் உள்பட 438 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>