பிரம்மாண்ட படம் 50 நாள் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்த படப்பிடிப்புக்குக் குழு தீவிரம்..
By Chandru
பாகுபலி படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மை கதையாக இது உருவாகிறது. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது அதில் ஜூனியர் என் டி ஆர் தோற்றம் கோம ராம் பீம் தோற்றத்தில் வெளிப்பட்டார். முஸ்லிம் தொப்பி அணிந்து நடந்து வரும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதற்கு ஆதிவாசிகளும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோம ராம் பீம் முஸ்லிம் மன்னர்களுக்கு எதிராகப் போராடினார். ஆனால் அவரது வேடத்தில் நடிக்கும் ஜூனியர் என் டி ஆருக்கு முஸ்லிம் தொப்பி அணிவித்தது தவறு. அந்த காட்சியை நீக்க வேண்டும் இல்லாவிட்டால் ராஜ மவுலியை தாக்குவோம் என்று எச்சரித்தனர். ஆனால் இதுகுறித்து ராஜமவுலி பதில் எதுவும் சொல்லவில்லை. ராஜமவுலிக்கு எச்சரிக்கை விட்டவர்களுக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர்.கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. முக்கிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன, மொத்தம் 50 நாட்கள் நடந்த படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. இதையடுத்து மற்றொரு புதிய ஷூட்டிங் திட்டத்துக்குப் படக் குழு திட்டமிட்டு வருகிறது.