திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அதிகரிக்க இந்தியன் வங்கி திட்டம்!
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை அதிகரிக்க இந்தியன் வங்கி திட்டம் வகுத்துள்ளது.வங்கித் துறையில் தொழில் முனைவோர்களுக்காக,பிராந்திய மொழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது இதுவே முதல்முறை. அந்தந்த மாநில மொழிகளில் பயிற்சி வகுப்பு நடத்துவதை இந்தியன் வங்கி செயல்படுத்தியுள்ளது.கடன் வழங்குவது மட்டுமில்லாமல் தொழிலை மேம்படுத்த ஆலோசனை வழங்கவும் இந்தியன் வங்கி முயற்சி எடுத்து தமிழில் பயிற்சி வகுப்பு நடத்துகிறது. ஒவ்வொரு கி்ளையிலும் தொழில் முனைவோர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறோம்.
பயிற்சி வகுப்பில் நிர்வாகவியல், நிதியியல் மற்றும் வங்கியில் சார்ந்த அம்சங்கள் தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது வரை மூன்று தொகுப்பு பயிற்சி வகுப்பு முடிந்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் கோவை, சென்னை,வேலூர் மாவட்ட தொழில்முனைவோர்கள் அதிகமாகப் பங்கேற்றனர்.
இந்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 1,500 நபருக்கு பயிற்சி வகுப்பு நடத்த இந்தியன் வங்கியின் திறன் மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.தொழில்முனைவோர்கள் அவர்கள் மொழியில் எளிதாக புரிந்து கொள்ளவும், ஆர்வமாக பங்கேற்கவும்.இது உதவியாக இருக்கும்.ஆன்லைன் பயிற்சி்யை வெற்றிகரமாக முடித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இந்தியன் வங்கி, பூர்ணதா கோ மற்றும் மேட் ஆகியவற்றோடு இ்ணைந்து சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.