அடித்து உதைக்க போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? - கனிமொழி காட்டம்
ஹெல்மெட் போடவில்லை என்றால் வழக்கு போடுவதை விட்டுவிட்டு, அடித்து உதைக்க போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வடபழனி தெருவில் வசிப்பவர் பிரகாஷ் (21) தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இவர், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தனது தாயார் மற்றும் சகோதரியுடன் தி.நகருக்கு வந்துள்ளார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது தாய், சகோதரியுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வந்துள்ளார்.
அப்போது போக்குவரத்து போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து, தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதத் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரகாஷிற்கும் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் வீடியோ எடுக்க பிரகாஷும் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும், தன்னால் அபராதம் கட்ட இயலாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர்கள் மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பிரகாஷைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவரது தாயார் தனது மகனை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார்.
மேலும் 3 பேரும் பொதுமக்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகள் 3 பேர் அந்த இளைஞரை பொதுமக்கள் முன்னிலையில் கம்பத்தில் பிடித்து வைத்து கைகளை முறுக்கும் காட்சிகளும், அவரது தாயாரும், சகோதரியும் அவரை விட்டுவிடும்படி கதறும் காட்சியும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூரியுள்ள கனிமொழி, ”சென்னை தி.நகரில் பிரகாஷ் என்ற வாலிபரை டிராபிக் போலீசார் கம்பத்தில் கட்டி வைத்து, கையை முறிக்க முயலும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர் தீக்குளிப்பு போலீசாரின் இது போன்ற அராஜக செயல்கள் கண்டிக்கத்தக்கது. சென்னை ஓ.எம்.ஆரில் டிரைவரை போலீஸார் பொதுவெளியில் அடித்ததால் அவர் தீக்குளித்தார்.
திருச்சியில் பெண் என்றும் பாராமல் எட்டி உதைத்துக் கொன்றனர், டிராபிக் போலீஸ். இப்போது, தாய் கண் முன் மகனை கட்டி வைத்து அடித்துள்ளனர். ஹெல்மெட் போடவில்லை என்றால் வழக்கு போடுவதை விட்டுவிட்டு, அடித்து உதைக்க போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com