ரஹானே வரலாறு படைக்க வாய்ப்பு!.. மைக்கேல் கிளார்க் கருத்து

இந்திய அணி ஆஸ்திரேலிய அணி இடையிலான டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதி துவங்குகிறது. மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியில் முதல் குழந்தை பிறக்க இருக்கிறது. அந்த சமயத்தில் மனைவியின் அருகில் இருப்பதற்காக விராட் கோலி இந்தியா வரவிருகிக்கிறார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர்த்து 2, 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இதற்கான அனுமதியை விராட் கோலி பிசிசிஐயிடம் பெற்றுவிட்டார். ஆனால் இவர் விளையாடாதது குறித்து முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ``விராட் கோலி இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. கோலி இல்லாததால் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும். அவர் இடத்தை யார் நிரப்பு போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கோலி இல்லாமல் இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஒரு ஆண்டுக்கு கொண்டாடலாம். கோலி இல்லாத நிலையில் இந்திய அணிக்கு இருக்கக்கூடிய ஒரு சாதகமான விஷயம் ரஹானே கேப்டன்ஷிப். இந்த தொடரில் ரஹானே தன்னை நிரூபித்தால் வரலாறு படைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

More News >>