கொரோனா தடுப்பு மருந்து.... எப்டிஏவிடம் அனுமதி கோரி அமெரிக்காவின் மாடெர்னா விண்ணப்பம்!
சீனா மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில், அந்நாட்டுடன் ஒத்துழைக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 38 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்தவகையில், அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம் ஒரு மருந்து கண்டுபிடித்துள்ளது. ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம், அமெரிக்காவின் பைஷர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு மருந்தை ஆய்வு செய்து வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நிறுவனமும் ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறது.
மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதில் 94% பலன் அளிப்பதாக மாடெர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தடுப்பு மருந்துக்கு அனுமதிகோரி அமெரிக்காவின் எப்டிஏவிடம் மாடெர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. விண்ணப்பத்தில் தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.