இவ்வளவு சாப்பாடா, அப்பாடி? நடிகை ஷாக்..

ஹாலிவுட் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஹீரோயின்கள் பலரும் உணவு கட்டுப்பாடு கடைப்பிடிக்கின்றனர். எக்ஸ்டரா ஒரு சிக்கன் பீஸ் சாப்பிட்டால் கூட உடலில் வெயிட் போட்டு விடும் என்று ஜாக்கிரதையாக இருக்கின்றனர். நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காகக் குண்டான தோற்றத்தில் நடிக்க 100 கிலோ வெயிட் போட்டார். இதற்காக அவர் கணக்கில்லாமல் சாப்பிட்டார். அப்படம் முடிந்த பிறகு வெயிட்டை குறைக்க முடியாமல் தவித்தார். அப்போது பாகுபலி 2ம் பாகத்தில் நடித்து வந்தார். அதில் ஸ்லிம் தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதால் அவருக்கு உடலை ஒல்லியாக்க இயக்குனர் ராஜமவுலி அவகாசம் கொடுத்தார்.

ஆனால் எதிர்பார்த்தளவுக்கு ஒல்லியாக முடியவில்லை. பிறகு அவரது காட்சிகளை கிராபிக்ஸில் கோடிகளில் செலவு செய்து ஒல்லியாக காட்டினார்கள்.நடிகை கீர்த்தி சுரேஷ் குண்டாயிருப்பதாக எண்ணி இந்தி படத்துக்காக ஒல்லி தோற்றத்துக்கு மாறினார். ஆனால் அதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. இவ்வளவு ஒல்லியான தோற்றத்தில் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று இந்தி பட நிறுவனம் அவரை கழற்றி விட்டது.

ஹீரோயின்கள் மட்டுமல்ல ஹீரோக்களும் குண்டான தோற்றத்துக்கு மாறினால் அவர்களது இமேஜும் மாறிப் போகிறது. நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படம் வரையிலும் வெயிட்டான தோற்றத்தில் நடித்தார். லாக்டவுனுக்கு பிறகு நடித்த ஈஸ்வரன் படத்துக்காக 30 கிலோ எடை குறைத்து உடல் இளைத்தார். அப்படத்தில் அவரது தோற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் ஒல்லிபிச்சான் தோற்றத்தில்தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா முதல் தீபிகா படுகோன் வரை தங்கள் உடற்கட்டை மெயின்டெயின் செய்கிறார்கள். இருவருமே பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படத்தில் நடிக்கின்றனர். தீபிகா படுகோனே டிரிபிள் எக்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் ஸண்டர் கேஜ் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் குவாண்டிகோ டெலிவிஷன் சீரிஸில் நடித்தார். தற்போது எவில் ஐ என்ற என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளது. பிரியங்கா ஆங்கில பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை மணந்தார். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். அங்கிருந்தபடியே ஆங்கில இந்தி படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அவர் தற்போது இணைய தள பக்கத்தில் ஒரு படம் வெளியிட்டிருக்கிறார். அவரது டைனிங் டேபிளில் மாமிச உணவு தட்டு நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பர்கர், சிக்கன். ஃபிஷ் ஃப்ரை என உணவுகள் குவிந்து கிடக்க அதைக்கண்டு இவ்வளவு சாப்பாடா அப்பாடி என்று ஷாக் ஆகிவிட்டார். அந்த புகைப்படம் தற்போது நெட்டில் வைரலாகி வருகிறது.

More News >>