மற்றொரு குழந்தையை இதய நோயிலிருந்து காப்பாற்றிய ஹீரோ..
பிரபல நடிகர்கள் பலர் இருந்தாலும் சில நடிகர்கள் பொதுச் சேவைக்காக தங்களது அறக்கட்டளைகள் மூலம் உதவுகின்றனர். நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்விக்காக வருடா வருடம் உதவி வருகிறார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அறக் கட்டளை மூலம் கல்விக்காக உதவுகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் டாக்டர் படிப்புக்காக உதவி கோரிய மாணவிக்கு உதவினார். அந்த மாணவி தற்போது டாக்டர் ஆகி இருக்கிறார்.
டோலிவிட்டிலும் இது போன்ற உதவிகள் நடிகர் மகேஷ்பாபு, நடிகை சமந்தா போன்றவர்கள் செய்து வருகின்றனர். இதய நோயால் பாதிக்கப்பட்ட 1000 குழந்தைகளுக்கு ஆந்திரா மருத்துவமனையுடன் இணைந்து பண உதவி செய்து காப்பாற்றி இருக்கிறார் மகேஷ்பாபு. ஆபரேஷன் மற்றும் அதற்கு பிந்தைய செலவுகளைத் தந்து அறக்கட்டளை மூலம் சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார். தற்போது மற்றொரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்.
இதுகுறித்து மகேஷ்பாபு மனைவி நம்ரதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், மற்றொரு ஆச்சர்யமான விஷயம். ஆந்திர மருத்துவமனை இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டிம்பிலுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றி இருக்கிறது. இதற்கான நிதியுதவியை மகேஷ் செய்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமியைக் காப்பாற்றி இருக்கிறார் மகேஷ். அவருக்கு நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.மகேஷ்பாபு தற்போது சர்காரு வாரி பாட்ட என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதில் ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பரசுராம இப்படத்தை இயக்குகிறார்.