நீச்சல் உடையில் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை.. டாப்ஸ் மட்டும் அணிந்து போஸ் தந்த நடிகை..
நடிகைகள் பெரும்பாலும் இணைய தள பக்கங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்கின்றனர். நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் அளிக்கிறார்கள். ஆனால் நடிகை டாப்ஸி இந்த விஷயத்தில் ஒரு பாலிசியுடன் இருக்கிறார். அவர் தனது இணைய தள பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்களை வெளியிடுவதில்லை. அதுபற்றி அவர் கூறும்போது, இந்த விஷயத்தில் நான் ஒரு எல்லை வைத்திருக்கிறேன். சில படங்களில் நீச்சல் உடையில் நடிக்க நான் மறுத்தது கிடையாது.
ஆனால் நீச்சல் உடை அணிய நான் விரும்பியதில்லை. ஏன்? என்னுடைய ரசிகர்களும் நான் நீச்சல் உடை அணிவதை விரும்புவதில்லை. அதனால் தான் எனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடை அணிந்து படங்களை நான் வெளியிடுவதில்லை என்றார். தற்போது டாப்ஸி நீச்சல் குளத்தில் டைனிங் டேபிள் போட்டு அமர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிடும் படத்தை வெளியிட்டிருக்கிறார். டூ பீஸ் நீச்சல் உடை அணிந்திருந்தாலும் முழு தோற்றத்தைக் காட்டாமல் டாப்ஸ் மட்டுமே தெரியும் படியான படத்தை வெளியிட்டிருக்கிறார்.
டாப்ஸி தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ராஷ்மி ராக்கெட் படத்தில் நடிக்கிறார். இப்படம் 2021ல் வெளியாக உள்ளது. டாப்ஸி நீச்சல் உடையில் படத்தை வெளியிட கட்டுப்பாடு வைத்திருக்கிறார். ஆனால் விடுமுறை பயணமாக மாலத் தீவு சென்ற காஜல் அகர்வால், வேதிகா, பிரணிதா. சோனாக்க்ஷி சின்ஹா போன்றவர்கள் நீச்சல் உடையில் போட்டிப்போட்டு கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தனர். நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு படி மேலே சென்று நீச்சல் உடையிலிருந்த படத்தைத் தனது தந்தையை வைத்தே எடுத்து வெளியிட்டார்.