வதந்திகளை நம்ப வேண்டாம்..! நடிகர் சிவகுமாருக்கு கொரோனா நெகடிவ்.. குஷியில் ரசிகர்கள்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா தமிழ்நாட்டை சூழ்ந்தது. ஆனால் இப்பொழுது அடுத்த டிசம்பர் மாதமே வந்துவிட்டது.இன்றும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. பல லட்சக்கணக்காண மக்கள் கொரோனா பிடியில் சிக்கி மீண்டும் மீள முடியாமல் மரணம் அடைகிறார்கள். இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல.. பிரபல நடிகையான தமன்னா, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப்பச்சன் என பலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சரியான சிகிச்சை பெற்று மீண்டு வந்தனர். அதில் சிங்கர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும் அவரின் நுரையீரல் மோசமாக பாதித்ததால் மரணம் அடைந்தார்.
இதன் அடிப்படையில் பல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த பட்டியலில் நடிகர் சிவகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் தனிமையில் உள்ளார் என்று தகவல்கள் பரவியது. ஆனால் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று கூறப்படுகிறது. இதை நிருபிக்கும் வன்னமாக நடிகர் சிவகுமார் சோசியல் மீடியாவில் நேற்று மாலை எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தனக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது அதில் நெகட்டிவ் வந்ததாகவும் இதனால் எனக்கு கொரோனா தொற்று இல்லை. நான் நலமுடன் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். இந்த தகலவை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.