சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி உட்பட 10 புதிய நீதிபதிகள் விரைவில் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதில் இருவர் கணவன் மனைவி ஆவர். மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த 1. கண்ணம்மாள் சண்முகசுந்தரம்

2. சத்திகுமார் சுகுமார குருப்

3. முரளி சங்கர் குப்புராஜீ

4. மஞ்சுளா ராமராஜு நல்லையா

5. தமிழ்ச்செல்வி டி வளையபாளையம்

6. சந்திரசேகரன்

7.நக்கீரன்

8.சிவஞானம் வீராசாமி

9.இளங்கோவன் கணேசன்

10.ஆனந்தி சுப்ரமணியன்

இவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,தற்போது ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உள்ள நிலையில், இவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும். உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள 10 மாவட்ட நீதிபதிகளில், முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் மனைவி ஆவார்கள்.

More News >>