கொத்து பரோட்டாnbspரெசிபி..

கொத்து பரோட்டா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையானபொருட்கள்

1. பரோட்டா - 2 2. முட்டை - 1 3. குருமா - அரை கப் 4. எண்ணெய் - தேவைக்கேற்ப 5. பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது) 6. தக்காளி - 1 7. மிளகாய் - 2 8. உப்பு - தேவைக்கேற்ப 9. கொத்தமல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன் 10. மிளகாய் பொடி - அரை டேபிள் ஸ்பூன் 11. மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன் 12. கறிவேப்பிலை - 2 கொத்து 13. கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

செய்முறை

பரோட்டாவை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 

பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள பரோட்டா துண்டுகளை சேர்த்து கிளறவும். பிறகு அதன் மேல் குருமா குழம்பை ஊற்றி எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறவும். 

பின்பு அதன் மேல் முட்டைகளை உடைத்து ஊற்றி 5 - 10 நிமிடம் வரை நன்கு கிளறிவிடவும். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை காய்கறி போட்ட குருமாவுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>