திருமணம் ஆகி ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை.. இதற்கு பின்னணி வரதட்சணை கொடுமையா?? மத பிரச்சனையா ??
சென்னையில் திருமணம் ஆகி ஒரே ஆண்டில் பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தை சார்ந்தவர் ஹரிஷ்குமார். இவர் உளவுத்துறையில் பணியாற்றி வருகிறார். ஓராண்டுக்கு முன் நிகிதா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். நாளடைவில் ஹரிஷ்குமார் சென்னைக்கு மாற்றலாகி தனது மனைவியுடன் பெசன்ட் நகரில் குடியேறினார்.
நிகிதா கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் இதனால் ஹரிஷ் குமாரின் பெற்றோர் திருமணத்திற்கு முன்னால் நிகிதா வீட்டில் 20 லட்சம் வரதட்சணையாக கொடுத்தால் மதம் மாற அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா வீட்டில் 17 லட்சம் கொடுத்து மீதி பணத்தை திருமணத்திற்கு பிறகு கொடுப்பதாக பேசி இருந்தனர். ஆனால் ஒரு வருடம் ஆகியும் பணம் திருப்பி கொடுக்காததால் ஹரிஷ்குமார் தாய் பணம் கேட்டு கொடுமை செய்துள்ளார். பணம் கொடுக்காவிட்டால் இந்து மதத்திற்கு மாற சொல்லியும் கட்டாய படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சம்பவ தினத்தன்று ஹரிஷின் தாய் மகனை பார்க்க ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர். அன்று நிகிதாவை மாமியார் வரதட்சணை தராவிட்டால் மதத்தை மாற்ற வேண்டும் என்று பயங்கர டார்ச்சரில் ஈடுபட்டுள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்த நிகிதா படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த நிகிதாவின் பெற்றோர் தனது மகளின் தற்கொலைக்கு பின்னால் ஹரிஷ் குமார் மற்றும் அவரது பெற்றோர் தான் இருக்கிறார்கள் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.