அது அவரின் முடிவு... அழகிரி குறித்து கனிமொழி!

அரசியலில் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரி கடந்த 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தனிக்கட்சி தொடங்குவது குறித்து அவர் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. பாஜக உள்ளிட்ட கட்சிகளில் சேருவது குறித்தும் தனது ஆதரவாளர்களிடம் விவாதித்தார் அழகிரி. இந்த சூழ்நிலையில், அழகிரி தனியாக ஆலோசனை நடத்துவதால், பாஜகவின் மெகா அணியில் அவரும் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது திமுகவினரிடையே கலக்கத்தை அளித்தது. நேற்று செய்தியாளர்களிடம், பேசிய அழகிரி, இந்த சட்டமன்றத் தேர்தலில் எனது பங்கு இருக்கும் என்றார்.

இதற்கிடையே, அழகிரி கட்சி தொடங்குவது குறித்தும், அவரின் ரீ என்ட்ரி குறித்தும் அவரின் தங்கையான கனிமொழியிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கொடுத்த கனிமொழி, ``அழகிரி எப்படி செயல்பட போகிறார் என்பது அவரது முடிவு. அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். கட்சி தொடங்குவது குறித்து கருத்து கூறவேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறியுள்ளார்.

More News >>