டூயல் செல்ஃபி காமிராவுடன் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்

விவோ வி20, விவோ வி20 எஸ்இ வரிசையில் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு இரட்டை காமிரா இதில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட இது, இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், விவோ இந்தியா இஸ்டோர், பேடிஎம் மால், டாடா கிளிக், பஜாஜ் பின்சர்வ் இஎம்ஐ ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கும்.

விவோ வி20 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.44 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல் தரம்) AMOLEDஇயக்கவேகம்: 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிமுன்பக்க காமிரா: 44 எம்பி மற்றும் 8 எம்பி இரட்டை செல்ஃபி காமிராபின்பக்க காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி மூன்று காமிராக்கள்இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; ஃபன்டச் ஓஎஸ் 11பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 765 SoCமின்கலம்: 4000 mAhஎடை: 170 கிராம்

5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத் வி5.1, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி வசதிகள் கொண்ட விவோ வி20 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.29,900/- ஆகும். ஐசிஐசிஐ வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலோடி வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.

More News >>