எல்ஐசி வழங்கும் கல்வி உதவித்தொகை!

எல்ஐசி நிறுவனம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டும், வறுமை நிலையில் வாடும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவி புரியும் பொருட்டும், 20-10-2006 ல் தங்க விழாவைக் கொண்டாடியது. எனவே வருடாவருடம் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான உயர்கல்விக்கு உதவி புரிந்து வருகிறது.

எல்ஐசி வழங்கும் இந்த கல்வி உதவி திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பை 2019-2020 ம் கல்வி ஆண்டில் முடிக்கும் மாணவர்கள் இந்த இணையதளத்தில் மூலம் https://customer.onlinelic.in/LICEPS/portlets/visitor/GJF/GJFController.jpf விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி ஆண்டில் (2019-2020) பத்தாம் வகுப்பை முடித்து, அடுத்ததாகத் தொழிற்கல்வி அல்லது தொழிற் பயிற்சி நிறுவனத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, உயர்கல்வியான பொறியியல், மருத்துவம் அல்லது கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளி பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பம் மாணவர்கள் பள்ளி இறுதியாண்டு தேர்வில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவரவர் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை சார்ந்த நிபந்தனைகள் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/INSTRUCTIONS-TO-CANDIDATES-(1).pdf

More News >>