உடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் பச்சை சுண்டைக்காய் துவையல் ரெசிபி..!

'உணவே மருந்து' என்ற வாசகத்திற்கு இணங்க அனைத்து வித நோய்க்கும் உணவே ஒன்றே போதுமானது. அந்த வகையில் சுண்டைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்க சுண்டைக்காய் உதவி செய்கிறது. சரி வாங்க பச்சை சுண்டைக்காய் துவையல் ரெசிபியை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்பச்சை மிளகாய் - 10க.பருப்பு - 50 கிராம்உ. பருப்பு - 50 கிராம்வெல்லம்- 1 துண்டுபுளி- சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகடுகு -2 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் துவையல் - 1/2 கப் கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:-முதலில் சுண்டைக்காயை நசுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு பச்சை மிளகாய், நசுக்கிய பச்சை சுண்டைக்காய் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், உப்பு, புளி, வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் உ.பருப்பு, க. பருப்பு வறுத்து இரண்டு கலவையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பச்சை சுண்டைக்காய் துவையல் தயார்..

More News >>