காதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..!
நடிகையை காதலிப்பதாக கூறி வயிற்றில் குழந்தையை கொடுத்த இயக்குனரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் காஸ்டிங் இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் ஆயுஷ் திவாரி. இவர் தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகையுடன் 2 வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளார். ஆயுஷ் நடிகையிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், சீரியலில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகையிடம் ரகசியமாக உறவு வைத்துள்ளார். இதனால் நடிகை மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால் ஆயுஷ் திவாரியிடம் கூறி இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நடிகை கூறியுள்ளார்.
அப்பொழுது தான் இயக்குனரின் உண்மை முகம் வெளிவந்துள்ளது. இது எனக்கு உருவான குழந்தை இல்லை என்றும் நடிகையின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் சினிமாவில் நடிப்பது முதல் முறை கிடையாது. சிலர் எங்கே வெளியே தெரிந்தால் பெயர் கெட்டுவிடும் பயத்தில் அப்படியே மறைத்து விடுவார்கள். ஆனால் இந்த நடிகை துணிச்சலாக காவல் நிலையத்தில் தன்னை இயக்குனர் ஆயுஷ் திவாரி காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கியுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து ஆயுஷ் திவாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.