ராஷ்மிகா பட குழுவில் பரவிய கொரோனா வைரஸ் .. ஷுட்டிங் நிறுத்தம்..

கொரோனா காலகட்டத்தில் ஷுட்டிங் நடத்துவது பெரும்பாடாகிவிட்டது.இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள். சேனிடைசர், உடல் வெப்பம் அளக்கும் கருவி, முககவசம் சமூக இடைவெளி கடைப் பிடிக்க வேண்டும், பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என்பது போன்ற விதிமுறைகள் படக் குழுவைச் சிக்கலில் ஆழ்த்துகிறது.விஜய் சேதுபதி நடித்த லாபம் படப்பிடிப்பு தர்மபுரி பகுதியில் உள்ள கிராமத்தில் நடந்தது. அங்கு நடிகர், நடிகைகளை பார்க்க ஊர் மக்கள் திரண்டு வந்ததால் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டது. சமூக இடைவெளி,முககவசம் போன்றவற்றைப் பார்வையாளர்கள் கடைப்பிடிக்கவில்லை.

இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆலவைகுந்தபுரமுலோ நடிகர் அல்லு அர்ஜூன் அடுத்த புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் தமிழ். தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 5 மாதமாகப் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. ஊரடங்கு தளர்வில் படப் பிடிப்பு தொடங்கியது. ஆந்திராவில் கிழக்கு கோதா வரி மாவட்டம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அதிக துணை நடிகர், நடிகைகள் கூட்டத்துடன் டைரக்டர் சுகுமார் படப் பிடிப்பு நடத்தி வந்தார்.

படக் குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து படக் குழு அனைவரையும் தனிமைப்படுத்தவும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யவும் கூறப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த அல்லு அர்ஜூன் ஐதராபாத் திரும்பினார். இதனால் படக்குழுவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

More News >>