கோடிகளில் வசூலை குவிக்கும் சூரரைபோற்று திரைப்படம்..! சந்தோஷத்தில் மிதக்கும் திரைப்பட குழு
2020 சூப்பர் ஹிட் திரைப்படமாக சூரரைபோற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முன்னணி நடிகரான சூர்யா நடித்துள்ளார். முதன் முதலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இவர் இறுதிசுற்று திரைப்படத்தை இயக்கி பல விருதுகளை அள்ளினார். சில வருடத்திற்கு பிறகு அடி தூள் கிளப்பும் சூரரைபோற்று திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தின் விமர்சனம் உலகம் எங்கும் பரவி வருகிறது. கொரோனா பரவலால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் சூரரைபோற்று திரைப்படம் ஓடிடி தளமான அமேசானில் வெளியானது.
திரைப்படத்தை பற்றின பாசிட்டிவ் கருத்துகள் மேலும் படத்தை மாபெரும் வெற்றியை சந்திக்க வைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அமேசானில் வெளியான திரைப்படங்களில் சூரரைபோற்று தான் அதிக பார்வையாளர்களை சந்தித்து உள்ளதாம். இதுவரை சூரரைபோற்று திரைப்படம் மூலம் அமேசானுக்கு 1370 கோடி வசூல் கிடைத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி திரைப்படத்திற்கு குவிந்த வசூலை சூரரைபோற்று திரைப்படம் முந்தி முதலில் உள்ளதாம். இத்திரைப்படதிற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஹீரோக்கள் நான்.. நீ.. என்று போட்டா போட்டி போட்டு கொண்டு வரிசையில் நிற்கின்றனர்..