சிறுகீரையில் கூட இட்லி செய்யலாம்.. வாங்க சமைக்கலாம்..

இட்லியில் பொடி இட்லி, ரவை இட்லி என பல வகைகள் உண்டு. அது போல நம் பார்க்க போகின்ற சமையல் குறிப்பு என்னவென்றால் சிறுகீரை இட்லி. சரி வாங்க எப்படி செய்து குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-இட்லி மாவு- 1 கிலோசிறுகீரை - 1 கட்டுசிறுபருப்பு - 100 கிராம்காய்ந்தமிளகாய் - 6தக்காளி - 1வெங்காயம் - 2உப்பு - தேவையான அளவு பூண்டு - 4 பல்

செய்முறை:-முதலில் கீரையை ஆய்ந்து நன்றாக தண்ணீரில் அலசி கொள்ளவும். பிறகு குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் சிறுகீரை ஆகியவை சேர்த்து 1 விசில் வரும் வரை விடவும்.

பின்னர் வெந்த கீரையை மிக்சியில் அரைத்து இட்லி மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்தால் சுவையான.. அரோக்கியம் மிக்க சிறுகீரை இட்லி தயார்..

More News >>