லேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்!
இன்று நடிகர் ரஜினி அளித்த பேட்டியில், ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன் என்றும், டிசம்பர் 31ம் தேதியன்று அதற்கான தேதியை அறிவிப்பேன் என்று அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதே போல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா.. எப்பவும் இல்லே.. என்று தெரிவித்தார். மேலும், தனது கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் அறிவித்து அவர்களை அறிமுகப்படுத்தினார்.
ரஜினியின் அரசியல் எண்ட்ரி தொடர்பாக தற்போது அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில இதோ......
``என் இனிய நண்பர் ரஜினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்; உங்கள் உடல்நலம் முக்கியம்! - மு.க.அழகிரி
``அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையலாம்" - துணை முதல்வர் ஓ.பி.எஸ்
``ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில்தான் தெரியும்” - கனிமொழி
``ஆன்மிகம் ஜாதி, மதத்துடன் தொடர்புடையது. ஆன்மிகம் வேறு அரசியல் வேறு; இரண்டையும் ஒன்றிணைப்பது குழப்பமான முயற்சி. ரஜினியின் திட்டம் என்ன என தெரியவில்லை” - தொல்.திருமாவளவன்
``தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான நேரம் இது” - ஆடிட்டர் குருமூர்த்தி
``நாட்டின் குடிமகன் என்ற முறையில் கட்சி துவங்குவது, அவரவர் உரிமை. இதை தவறு என சொல்லக்கூடாது. அவர் நடித்த ஸ்டண்ட் படங்களுக்கு உள்ள வரவேற்பு, தெய்வீக படங்களுக்கு இல்லை. தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகளில் இல்லாத புதிய கொள்கையாக அவர் எதை சொல்ல போகிறார் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். அரசியலில் நுழைந்திருப்பதை வரவேற்கிறேன்” - தா.பாண்டியன்
``ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்வி முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ரஜினி- சசிகலா இடையேதான் போட்டி நிலவும், பாஜக குழப்பமான நிலைக்கு செல்லும்” - பா.ஜ.கவின் சுப்ரமணியன் சுவாமி
``ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஊழல் என ரஜினி கூறுவது திமுகவை தான். கட்சி ஆரம்பிப்பது அவரவர் உரிமை” - அமைச்சர் ஜெயக்குமார்
`வாழ்த்துகள் தலைவர் - நடிகை பூனம் பாஜ்வா
``வெல்கம்! ரஜினி ரசிகர்களுக்கு அட்வான்ஸ் ஹெப்பி நியூ இயர்” - நடிகர் ஆனந்த்ராஜ்
``இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்'' - அனிருத்
Wow....... Thalaivaaaaa வா தலைவா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
``புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார்'' - இயக்குநர் லிங்கு சாமி