இன்னும் இத்தனை புயலா? தாங்குமா தமிழகம்!

தமிழகத்தில் தொடர்ந்து மூன்று வாரமாக பல்வேறு புயல்களின் தாக்கத்தினால் மழை பெய்த வண்ணம் உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஏரி, குளம் மற்றும் கண்மாய் என அனைத்தும் தண்ணீர் மயமாய் உள்ளன. சென்னையில் தொடர் மழையின் எதிரொலியால் ஏரிகள் நிரம்பியதாலும், ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே உள்ளதாலும் தண்ணீரைத் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

கடந்த முறை நிவார் புயலின் தாக்கத்தால் பரிதவித்த சென்னைவாசிகள் மற்றும் கடற்கரையோர மக்கள்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குள், அடுத்த புரெவி புயலின் தாக்கம் தென் தமிழகம் மற்றும் சென்னைவாசிகளை விடவில்லை. அதற்குள் அடுத்ததாக அந்தமானில் அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, புயலாக வலுப்பெறவும் வாய்ப்புண்டு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வலுப்பெறும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்காக வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் நாடுகளைக் கட்டமைப்புகள் உண்டு.கடந்த முறை நிவார் என்ற பெயரைச் சூட்டியது ஈரான் ஆகும். இதனைத் தொடர்ந்து உருவான அடுத்த புயலாக்கு "புரெவி" என்ற பெயரைச் சூட்டியது மாலத்தீவு ஆகும்.

இந்த வரிசையில் அடுத்தடுத்த புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயல்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் பின்வருமாறு:

டிசம்பர் 8 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் (Tauktao) எனப் பெயர் வைக்க வாய்ப்பு.

டிசம்பர் 17 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் (Yaas) எனப் பெயர் வைக்க வாய்ப்பு.

டிசம்பர் 24 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் (Gulab) எனப் பெயர் வைக்க வாய்ப்பு.

ஜனவரி 01 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் (Shaheen) எனப் பெயர் வைக்க வாய்ப்பு.

ஜனவரி 8 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் (Jawad) எனப் பெயர் வைக்க வாய்ப்பு.

என் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

More News >>