தமிழ் திரைத்துறை போராட்டத்துக்கு தெலுங்கு திரையுலகம் திடீர் ஆதரவு!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு தெலுங்கு திரையுலகம் ஆதரவளித்தது.
டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்கக் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மார்ச் 1-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதிய படங்கள் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டது.
ஆனால், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிப் படங்கள் தமிழக திரையரங்குகளில் தொடர்ந்து ஓடின. இது போராட்டத்தை குலைப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட குழுவினர் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, தமிழ்த் திரைத்துறையினருக்கு ஆதரவு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை முதல் தெலுங்குப் படங்களும் தமிழகத்தில் வெளியாகாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com