`மேட்ச் வின்னர் நடராஜன்... முதல் சர்வதேச டி20 போட்டியிலும் ஜொலித்த தமிழக தங்கம்!
இந்திய அணிக்காகத் தனது முதல் ஒரு நாள் போட்டியை விளையாடிய தமிழக இளைஞர் நடராஜன் இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மேலும் கடந்த 6 போட்டிகளில் பவர் பிளேயில் இந்திய அணி விக்கெட் வீழ்த்தாத நிலையில் இன்று அதற்கு முடிவுகட்டி நடராஜன், பவர் பிளேயில் விக்கெட் எடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று தனது முதல் சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடினார்.
அவருக்கு பும்ரா தொப்பி வழங்கி கவுரவித்தார். இந்தப் போட்டியில் நடராஜன் நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் முதல் சர்வதேச டி20 போட்டியிலும் தனது முத்திரையை வலுவாக பதித்துள்ளார் நடராஜன். நடராஜன் பங்களிப்பால் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. கே.எல். ராகுல், ஜடேஜாவும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அசத்தினர். இதன்பின் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.